மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் திரு. கிருஷ்ண சந்திர பத்ரா, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்தார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதற்காகவும், அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டதற்காகவும் திரு. பத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு, முதலீட்டு வரைபடத்தில் மாநிலத்தை வளர்த்து, மாநிலத்தின் இளைஞர்களிடையே தொழில்முனைவோர் மற்றும் புதுமையை உருவாக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
“ஒடிசாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரின் கீழ் பல நிறுவனங்கள் உள்ளன, குறிப்பாக விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள். பகவான் ஜகந்நாதரின் மண் அறிவியல் சமூகத்திற்கு ஏராளமான நகைகளை வழங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
டாக்டர் ஜிதேந்திர சிங்கின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சகங்கள் சாதித்த சாதனைகளைப் பாராட்டிய திரு. பத்ரா, அவரது வழிகாட்டுதலையும் ஆதரவையும் நாடினார். அவரது அமைச்சகங்களைப் பொறுத்தவரை மத்திய அரசின் ஒத்துழைப்பு அளிக்கும் என்று டாக்டர். சிங் அவருக்கு உறுதியளித்தார்.
தொடக்கத்தில், டாக்டர் ஜிதேந்திர சிங், “பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் நம்பிக்கை வைத்து வளர்ச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று கூறினார். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு 2047 ஐ அடைவதில் ஒடிசா முக்கிய பங்கு வகிக்கும் என்றும், கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஒரு முன்மாதிரியைக் காட்டும் என்றும் அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்