புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற குடிமைப் பணி பயிற்சி நிறுவனங்களின் மாநாட்டில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘அம்ரித் கியான் கோஷ்’ போர்ட்டலையும், ‘ஆசிரியர் மேம்பாட்டு போர்ட்டலையும்’ தொடங்கி வைத்தார்.
தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் மிஷன் கர்மயோகி பாரத் ஆகியவற்றின் பயணத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். “இது குடிமைப் பணி பயிற்சியை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் குறிக்கிறது, மேலும் இது உலகளாவிய கண்ணோட்டத்துடன் இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய எதிர்காலத்திற்கு தயாராக உள்ள குடிமைப் பணியையும் சுட்டிக்காட்டுகிறது” என அவர் கூறினார்.
குறுகிய காலத்திற்குள், சிபிசி மற்றும் மிஷன் கர்மயோகி ஆகியவை நிர்வாக கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்று டிஓபிடி அமைச்சர் மேலும் கூறினார், “தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்தின் பரிணாம வளர்ச்சியுடன், ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அம்ரித் கியான் கோஷ் என்ற இரண்டு இணைய தளங்களைத் தொடங்கி வைக்கும் போது, “எங்களது பகிரப்பட்ட கற்றல் வள அறிவு வங்கி, கல்வி நிறுவனங்கள் எப்போதும் மேற்கத்திய நாடுகளை நம்பியிருப்பதற்குப் பதிலாக இந்தியாவை மையமாகக் கொண்ட வழக்கு ஆய்வுகளை அணுக உதவும்” என்றார்.
ஒரு பயிற்சியாளர் தானாகவே ஒரு நல்ல ஆசிரியராக மாறுவதில்லை என்றும், பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அறிவை வழங்குவதை உறுதி செய்வதற்கு ஆசிரிய மேம்பாட்டுத் திட்டம் முக்கியமாக இருக்கும் என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.
குடிமைப் பணி பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய தரநிலைகளின் சாதனைகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், “நாங்கள் 140 க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளோம், மேலும் ஒவ்வொரு அங்கீகாரமும் மிகவும் திறமையான, சேவையை நோக்கிய ஒரு படியை பிரதிபலிக்கிறது” என்றார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் 13 தர மேம்பாட்டுத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இது நமது பயிற்சி நிறுவனங்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான செயல் திட்டமாகும். 20 அமைச்சகங்களுக்கு அங்கீகாரம் வழங்கினார்.
1.4 பில்லியன் இந்தியர்களின் வாழ்க்கையைத் தொடும் ஆளுகையின் தரம், இந்த நிறுவனங்களில் அளிக்கப்படும் பயிற்சியின் நேரடி தாக்கத்திற்கு உள்ளாகும் என்று அவர் கூறினார். அரசு சாரா நிறுவனங்களுக்கு இந்தத் துறையைத் திறந்து விட்ட பின்னர் மிகக் குறுகிய காலத்திற்குள் சிபிசி மற்றும் விண்வெளி மற்றும் உயிரியல் தொழில்நுட்பத் துறை அடைந்த வெற்றிகளுக்கு இணையான அம்சங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். மற்ற துறைகளும் இணைந்து செயல்பட நேரம் தேவை என்பதால் இதில் சேருமாறு அவர் அறிவுறுத்தினார்.
திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அடில் ஜைனுல்பாய் மற்றும் மனிதவள உறுப்பினர் டாக்டர் ஆர்.பாலசுப்பிரமணியம்; டாக்டர் அல்கா மிட்டல், உறுப்பினர்-நிர்வாகம்; இந்தியா முழுவதிலுமிருந்து அங்கீகாரம் பெற்ற 20 அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் சி.எஸ்.டி.ஐ.யின் இயக்குநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
திவாஹர்