சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ இறுதிச் சடங்கு! உலகத் தலைவர்கள் இறுதி அஞ்சலி!- கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டங்கூட்டமாகத் திரண்ட மக்கள்!

Lee Kuan Yew oLee Kuan Yew6Lee Kuan Yew.jpg2Lee Kuan Yew3Lee Kuan Yew4Lee Kuan Yew5Lee Kuan Yew7Lee Kuan Yew8Lee Kuan YewaLee Kuan YewbLee Kuan YeweLee Kuan YewcLee Kuan YewfLee Kuan Yew.jpg9Lee Kuan Yew cathalicLee Kuan Yew x Lee Kuan YewLee Kuan Yew1

சிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமானவரும், அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ (91) கடந்த திங்கள்கிழமை காலமானார். அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.

லீ குவான் யூவின் மறைவை ஒட்டி மார்ச் 23 முதல் மார்ச் 29 வரை ஒரு வாரகாலம் தேசிய அளவில் துக்க வாரமாக சிங்கப்பூர் அரசு கடைபிடித்தது.

லீ குவான் யூவின் குடும்பத்தினர், அவருக்கு மார்ச் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் மார்ச் 25 முதல் மார்ச் 28 வரை அஞ்சலி செலுத்தினர். இதில் கிட்டத்தட்ட 4,15,000 பொதுமக்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வந்து நேரடியாக அஞ்சலி செலுத்தினர். இது சிங்கப்பூர் மொத்த மக்கட்தொகையில் 12 விழுக்காடு ஆகும். 

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Untitled1

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்கமுன்னாள் அதிபர்  பில்கிளிண்டன், இந்தோனேசியா அதிபர் ஜோகோவிடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், இங்கிலாந்து பாராளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் லீ இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

லீ குவான் யூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கு இன்று பல்கலைக் கழகக் கலாசார நிலையத்தில் நிறைவுபெற்றது.

நாடாளுமன்ற இல்லத்திலிருந்து அங்கு கொண்டுவரப்பட்ட அவருடைய நல்லுடலை ஏந்தியப் பேழையைக் காண, வழி நெடுகிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டங்கூட்டமாகத் திரண்டனர்.

நாடாளுமன்ற வளாகம், பாடாங், நகர மண்டபம் (City Hall) ஆகிய இடங்களில் மக்கள் குடைகளை பிடித்தவண்ணம் லீ குவான் யூவின் இறுதி ஊர்வலத்தைக் காண காத்திருந்தனர். 

அரசு முறையிலான இறுதிச் சடங்கு இன்று (மார்ச் 29) பிற்பகல் இரண்டு மணிக்கு, தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில், மண்டாய் தகனச் சாலையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

லீ குவான் யூவின் மறைவு, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.

-ஆர்.மார்ஷல்.