2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைத் தற்காப்பு, சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த 1037 பேருக்கு வீரதீர / சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2024-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல், குடிமைப் பாதுகாப்பு, சீர்திருத்தப் பணிகள் துறையைச் சேர்ந்த 1037 பேருக்கு வீரதீர மற்றும் சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வீரதீரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கம் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. தெலங்கானா காவல் துறையின் தலைமைக் காவலர் திரு சதுவு யாதய்யா துணிச்சலுடன் போராடி கொள்ளையர்களை பிடித்ததற்காக இப்பதக்கம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வீரதீர பதக்கம் 213 பேருக்கு வழங்கப்படுகிறது.

வீரதீர செயல்களுக்கான 213 பதக்கங்களை பெறுவோரில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 52 வீரர்கள், எஸ்எஸ்பியிலிருந்து 14 பேர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 வீரர்கள், 06 எல்லைப் பாதுகாப்புப் படையினர் 6 பேர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் 94 பேருக்கு வழங்கப்படுகிறது. இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை இயக்குனர் திரு கே.வன்னிய பெருமாள், கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு அபின் தினேஷ் மோடக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மகத்தான சேவைக்கான பதக்கம் 729 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 21 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply