ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.80.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (14.08.2024) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் 32 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 விடுதிக் கட்டடங்கள், 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 14 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் 32 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 28 சமுதாயக் கூடங்களை திறந்து வைத்தார்.
எஸ்.திவ்யா