சேவை என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி: டாக்டர் மாண்டவியா

புதுதில்லியில் இன்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 500 துடிப்பான இளைஞர் தன்னார்வலர்கள் குழுவுடன் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே ஆகியோர் கலந்துரையாடினர். 2024 சுதந்திர தின விழாவில், நாடு முழுவதும் இருந்து இளைஞர் தன்னார்வலர்கள், 400 நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் 100 மை பாரத் தன்னார்வலர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

தன்னார்வலர்களின் இளமை  சக்தி மற்றும் அர்ப்பணிப்புக்கு தனது பாராட்டை வெளிப்படுத்திய டாக்டர் மாண்டவியா, “நமது இளம் தன்னார்வலர்கள் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தின் உண்மையான ஜோதி என்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் அவர்களின் உற்சாகமும் அர்ப்பணிப்பும் ஊக்கமளிக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

மற்றவர்களுக்கு சேவை புரியும் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய அவர், “சேவை என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஒருவருக்கொருவர் உதவுவது நமது வளர்ப்பில் உருவானது என்று கூறினார். இந்த மதிப்புகள் சவால்களை சமாளிக்கவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் என்று தெரிவித்தார்.

சமூக சேவை மற்றும் தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். சமூக சேவை உணர்வுடன் பல்வேறு துறைகளில் தங்களது முயற்சிகளைத் தொடருமாறு தன்னார்வலர்களை ஊக்குவித்த அவர், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று கூறினார்.

இளைஞர்களின் திறனை அங்கீகரித்த டாக்டர் மாண்டவியா,
“அவர்களிடம் மகத்தான ஆற்றலை தான் காண்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில், முத்ரா திட்டம் மற்றும் புத்தொழில் இந்தியா போன்ற முன்முயற்சிகளுடன் தொழில்முனைவோர் மற்றும் புதுமைகளை வளர்ப்பதன் மூலமோ அல்லது கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் விளையாட்டு திறமைகளை வளர்ப்பதன் மூலமோ இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க அரசு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply