தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருடன் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால, இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அறிவித்திருந்தன.

அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக, ராஜ்பவனுக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்று அழைத்துச் சென்றார். மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பொன்முடி, எ.வ.வேலு உள்பட தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

சி‌.கார்த்திகேயன்

Leave a Reply