தேசிய நிலக்கரி குறியீடு (தற்காலிகமானது) 2023 ஜூனில் 147.25 புள்ளிகளாக இருந்த நிலையில், 2024 ஜூனில் 3.48%குறைந்து142.13 புள்ளிகளாக உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சந்தையில் போதுமான அளவு நிலக்கரி இருப்பில் உள்ளதையே எடுத்துக்காட்டுகிறது.
தேசிய நிலக்கரி குறியீடு (NCI) என்பது, அறிவிக்கப்பட்ட விலைகள், ஏல விலைகள் மற்றும் இறக்குமதி விலைகள் போன்ற அனைத்து விற்பனை வழிகளிலும் நிலக்கரி விலையை ஒருங்கிணைக்கும் விலைக்குறியீடாகும்.
முறைப்படுத்தப்பட்ட (மின்சாரம் மற்றும் உரம்), மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான, சமையலுக்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி, சமையல் அல்லாத உபயோகங்களுக்கான நிலக்கரி விலைகளை உள்ளடக்கியதாகும்.
2017-18-ம் நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசிய நிலக்கரி குறியீடு, சந்தை தந்திரங்களுக்கான நம்பகமான குறியீடாக பயன்பட்டு வருவதுடன், விலை ஏற்றத்தாழ்வுகள் குறித்த ஆழமான கருத்தையும் வழங்குகிறது.
எஸ்.சதிஸ் சர்மா