ரஷ்ய கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் அலெக்சாண்டர் அலெக்சேவிச் மொய்சேயெவ், ஆகஸ்ட் 19 முதல் 22 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுக்கு இந்த பயணம் ஒரு சான்றாகும். இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு கடற்படை உறவுகளை வலுப்படுத்துவதும், கடற்படை ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை கண்டறிவதும் இந்த பயணத்தின் நோக்கமாகும்.
அட்மிரல் அலெக்சாண்டர் அலெக்சேவிச் மொய்சேவ், ஆகஸ்ட் 19, 24 அன்று புதுதில்லியில் இந்திய கடற்படையின் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியை சந்தித்து, கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். சவுத் பிளாகில் புல்வெளியில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய கடற்படை, ரஷ்ய கடற்படையுடன் பல்வேறு வழிகளில் ஒத்துழைத்து வருகிறது.
ரஷ்ய கடற்படையின் தலைமை தளபதி, ராணுவ தளபதி, பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் இந்தியாவின் தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகியோரையும் புதுதில்லியில் தனது உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சந்திக்க உள்ளார்.
திவாஹர்