கோல் இந்திய நிறுவனம் (CIL) சிஐஎல்-ன் முன்னணி துணை நிறுவனமான தென்கிழக்கு நிலக்கரி சுரங்க, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEF&CC) வழங்கப்பட்ட அங்கீகாரம் பெற்ற ஈடுசெய்யும் காடு வளர்ப்பு (ACA) வழிகாட்டுதல்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
நிலக்கரி சுரங்க திட்டங்களுக்கு பெரும்பாலும் வன நிலம் தேவைப்படுகிறது, சுற்றுச்சூழல் ஒப்புதல் செயல்முறையின் ஒரு பகுதியாக வனவியல் அனுமதி (எஃப்சி) தேவைப்படுகிறது. இந்த அனுமதிகளைப் பெறுவதில் ஒரு பெரிய சவால் பொருத்தமான ஈடுசெய்யும் காடு வளர்ப்பு (CA) நிலத்தை அடையாளம் காண்பதாகும். இதற்கு பதிலளிக்கும் விதமாக, வனவியல் அனுமதி ஒப்புதல் செயல்முறையை ஒழுங்குபடுத்துதல், காடு வளர்ப்பு செலவுகளைக் குறைத்தல், காடு வளர்ப்பு முயற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட காடு வளர்ப்புக்கான வழிகாட்டுதல்களை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்று அமைச்சகம் 2023, ஜனவரி 24 அன்று வெளியிட்டது.
முக்கிய சாதனைகள்:
· உயிரியல் மறுசீரமைப்பு மற்றும் தோட்டம்: இந்த முயற்சிகள் நிலக்கரி நீக்கப்பட்ட நிலங்களை தேக்கு, சால், பாபுல், வேம்பு மற்றும் பிற உள்ளூர் உயிரினங்களுடன் செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளாக மாற்றியுள்ளன.
· பல்லுயிர் செறிவூட்டல்: மீட்கப்பட்ட நிலங்கள் இப்போது பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வழங்குகின்றன. இதில் சோம்பல் கரடி, நரி போன்ற இனங்கள் மற்றும் பல்வேறு ஊர்வன மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் உள்ளன.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான (SECL) தென் கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் அர்ப்பணிப்பு (ACA) காடு வளர்ப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதிலும், நிலக்கரி நீக்கப்பட்ட நிலங்களில் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பதற்கான அதன் முயற்சிகளிலும் தெளிவாகிறது.
(எஸ்.இ.சி.எல்) தென் கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம், தனது காடு வளர்ப்பு முயற்சிகளை தொடர்ந்து விரிவுபடுத்துவதால், இந்தியாவின் சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு பங்களிப்பதிலும், பசுமையான, நிலையான எதிர்காலத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
எஸ்.சதிஸ் சர்மா