60 நியாய விலைக் கடைகளை மக்கள் ஊட்டச்சத்து மையங்களாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டத்தை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, 60 நியாய விலைக் கடைகளை மக்கள் ஊட்டச்சத்து மையங்களாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், FPS சஹாய் செயலி, Mera Ration செயலி 2.0, தர மேலாண்மை அமைப்பு, தரக் கையேடு, ஒப்பந்தக் கையேடு FCI மற்றும் 3 ஆய்வகங்களின் NABL அங்கீகாரம் ஆகியவற்றையும் அவர் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர், தொடங்கப்பட்ட 6 திட்டங்களும் உணவுப் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும், அதே நேரத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும், கடுமையான தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்யும், ஊட்டச்சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்தும் மற்றும் அமைப்பில் கசிவைத் தடுக்கும் என்றும் கூறினார்.

குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 60 நியாய விலைக் கடைகளை மக்கள் ஊட்டச்சத்து கேந்திரமாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்த திரு ஜோஷி, இந்தியா முழுவதும் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளர்களின் வருமான அளவை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மக்கள் ஊட்டச்சத்து மையங்கள் தீர்வு அளிக்கிறது என்றார். இந்த மையங்கள், நுகர்வோருக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்குவதோடு, நியாயவிலைக்கடை டீலர்களுக்கு கூடுதல் வருமான ஆதாரத்தையும் வழங்கும். மத்திய அரசின் முதல் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் ஊட்டச்சத்து மையங்களில் 50% பொருட்களை ஊட்டச்சத்து பிரிவின் கீழ் சேமித்து வைக்கவும், மீதமுள்ளவற்றை மற்ற வீட்டுப் பொருட்களை வைத்திருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியாய விலைக் கடை விற்பனையாளர்களுடனும் மத்திய அமைச்சர் கலந்துரையாடினார்.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற இலக்கை நோக்கி, நாடு துடிப்புடன் நகர்ந்து வருகிறது என்று திரு ஜோஷி குறிப்பிட்டார். மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் முன்முயற்சிகள், இத்தகைய மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக செயல்படும். நாட்டில் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, சுமார் ரூ. 12 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டுடன் பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டம் (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஏற்கனவே நாடு முழுவதும் தடையற்ற பரிவர்த்தனைகளுக்கு வழிவகுத்து வருகிறது.

டிஜிட்டல்மயமாக்கலில், துறை மேற்கொண்ட முனைப்பான முயற்சிகளின் விளைவாக, பயனாளிகளுக்கு, பயனாளர்களை மையமாகக் கொண்ட சேவைகள் மேம்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் கூறினார். Mera Ration App 2.0, தர மேலாண்மை அமைப்பு, தர கையேடு, ஒப்பந்த கையேடு, FPS சஹாய் பயன்பாடு மற்றும் ஆய்வகங்களின் NABL அங்கீகாரம் ஆகியவற்றின் அறிமுகம் டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். பொது விநியோக முறையில் மேலும் புதுமை மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டைக் கொண்டுவருவதற்காக சம்பந்தப்பட்டவர்களிடையே உள்ள ஆலோசனைகளை இத்துறை வரவேற்கிறது என்று திரு ஜோஷி மேலும் கூறினார்.

SIDBI ஆல் உருவாக்கப்பட்ட “FPS-Sahay” என்பது, தேவைக்கேற்ப விலைப்பட்டியல் அடிப்படையிலான நிதி (IBF) பயன்பாடாகும், இது FPS டீலர்களுக்கு முற்றிலும் காகிதமற்ற, இருப்பு இல்லாத, அடமானம் இல்லாத, பணப்புழக்க அடிப்படையிலான நிதியுதவியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுக்காக அதிக மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்களுடன் மேரா ரேஷன் செயலி 2.0 மொபைல் பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் (மத்திய மற்றும் மாநில அரசு) தங்கள் பங்கிற்கு ரேஷன் கார்டுகள் மற்றும் பொது விநியோகத்திட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை அணுக முடியும்.

தர மேலாண்மை அமைப்பு என்பது  உணவு மற்றும் பொது விநியோகத்துறை (DFPD) & இந்திய உணவுக் கழகத்தின் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு டிஜிட்டல் பயன்பாடாகும். தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்களுக்கு டிஜிட்டல் கியூஎம்எஸ் ஒரு முக்கிய கருவியாகும், இது கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகிய நிலைகளின் போது அனைத்து முக்கிய பரிவர்த்தனைகளையும் நிகழ்நேரத்தில் கைப்பற்ற முடியும். மத்திய அரசால் சேமிக்கப்படும் உணவு தானியங்களின் கண்டிப்பான தர நிர்ணயத்தை உறுதி செய்வதற்காக பின்பற்ற வேண்டிய பல்வேறு செயல்முறைகள், தர நிர்ணயங்கள், வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய விரிவான விளக்கத்தை அளிக்கும் விரிவான தரக்கட்டுப்பாடு கையேடு ஒன்றை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை உருவாக்கியுள்ளது.

இந்திய உணவுக் கழகத்தின் (FCI) ஒப்பந்தக் கையேடும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகத்தின் ஒப்பந்தக் கையேடு, அனைத்து குழப்பங்களையும் நீக்குவதற்கும், போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கும், ஒப்பந்தங்களில் அதிகபட்ச வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவதற்கும் வழிகாட்டும் கோட்பாடாக கருதப்படுகிறது. இந்திய உணவுக்கழக டெண்டர்களில் பங்கேற்பதை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். மேம்பட்ட வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் திருப்தியுடன், சர்வதேச தரங்களுக்கு இணங்குவதற்கும், சோதனை மற்றும் அளவுத்திருத்த சேவைகளில் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும், துறை ஆய்வகங்களுக்கு NABL ஆய்வகங்களின் அங்கீகாரம் முக்கியமானது.

திவாஹர்

Leave a Reply