முன்னாள் படைவீரர்களையும், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத்துறை இன்று (2024 ஆகஸ்ட் 23) உத்தரபிரதேசத்தின் கான்பூர் கண்டோன்மெண்டில் வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் உத்தரபிரதேசம், அருகிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்த 1,573 முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. 41 நிறுவனங்கள் இதில் பங்கேற்று 1,365 காலியிடங்களை நிரப்ப ஆட்களை தேர்வு செய்தன.
தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் வீரர்கள் நேர்காணல் செய்யப்பட்டு தகுதிக்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார்கள். இந்த நிகழ்வு பெரு நிறுவனங்களுக்கும் முன்னாள் படை வீரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்தது. முன்னாள் படைவீரர்கள் தங்கள் தொழில்நுட்ப, நிர்வாக திறமையை வெளிப்படுத்த இதன் மூலம் ஒரு வாய்ப்பைப் பெற்றனர். அனுபவம், ஒழுக்கம், பயிற்சி பெற்ற முன்னாள் வீரர்களின் குழுவினரை பணிக்கு தேர்வு செய்வதன் மூலம் பெரு நிறுவனங்கள் பயனடைகின்றன. இந்த முகாமின் போது பல்வேறு நிறுவனங்களால் தொழில்முனைவோர் செயல் திட்ட மாதிரிகளும் வழங்கப்பட்டன. இந்த வேலைவாய்ப்பு முகாமை முன்னாள் படைவீரர் நலத்துறை செயலாளர் டாக்டர் நிட்டன் சந்திரா தொடங்கி வைத்தார். மத்திய கட்டளை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் முகேஷ் சதா, உள்ளிட்டோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திவாஹர்