பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தமது அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக, டென்னசி, மெம்பிஸில் உள்ள கடற்படை மேற்பரப்புப் போர் மையத்தில் (NSWC) உள்ள எல்சிசி-யைப் பார்வையிட்டார். எல்சிசி என்பது நீர்மூழ்கிக் கப்பல்கள், டார்பிடோக்கள், கடற்படை மேற்பரப்பு கப்பல்கள், ப்ரொப்பல்லர்கள் ஆகியவற்றைச் சோதிப்பதற்கான உலகின் மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நீர் சுரங்கப்பாதை வசதி அமைப்புகளில் ஒன்றாகும். பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த வசதி குறித்து விளக்கப்பட்டது.
திரு ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர், இந்திய கடற்படையின் கடற்படை செயல்பாடுகளின் தலைமை இயக்குநர், டிஆர்டிஓ பாதுகாப்பு தொழில்நுட்ப ஆலோசகர் ஆகியோர் இருந்தனர். அவரை அமெரிக்க கடற்படை கொள்கைக்கான துணை செயலாளர் வரவேற்றார்.
இந்தியாவில் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாட்டிற்காக இதேபோன்ற வசதியை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
எம்.பிரபாகரன்