தூத்துக்குடி மாவட்டம், மேலஆத்தூர் ஊராட்சி, நரசன்விளை கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் சாதனை குறித்த புகைப்படக்கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தமிழக அரசின் திட்டங்கள், நலத்திட்டப்பணிகள், அதனை பெறும் முறைகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கிராமம் தோறும் புகைப்படக்கண்காட்சி வைக்கப்பட்டு வருகின்றது.
மேலும், அரசின் திட்டங்கள் அதனால் பயன் அடைந்த மக்களின் பாராட்டுக்களை அரசு திரைப்பட பிரிவு மூலம் தயாரிக்கப்பட்ட குறுந்தகடுகள் மூலம் கிராமங்கள் தோறும் வீடியோ வாகனம் மூலம் வீடியோ படக்காட்சிகளாக ஒளிபரப்பபட்டு வருகிறது.
இக்கண்காட்சியில் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை போன்ற 30 மேற்பட்ட துறைகளின் சார்பில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள், நலத்திட்ட உதவிகள் இடம் பெற்றுள்ளது.
முக்கியமாக சமூக நலத்துறையின் சார்பில் உதவித்தொகையுடன் தாலிக்கு தங்கம், தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் போன்ற திட்டங்களினால் பயன் அடைந்த பயனாளிகளின் பட்டியலும் இடம் பெற்றிருந்தது.
தமிழக அரசின் சாதனை விளக்க வீடியோ படக்காட்சியும் நடத்தப்பட்டது.
இத்தகைய அரசின் சாதனையை விளக்கும் புகைப்படக்கண்காட்சியில் அரசின் அனைத்து துறையின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறும் விதங்களை அறிந்து கொண்டு மக்கள் பயன் அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.ரவி குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
-பி.கணேசன் @ இசக்கி.