புனேவில் உள்ள குவாண்டம் டெக்னாலஜிஸுக்கான டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகள் ஆய்வகம், மும்பையின் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சூப்பர் கண்டக்டிங் சர்க்யூட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட 6-கியூபிட் குவாண்டம் செயலியின் முழுமையான சோதனையை முடித்துள்ளனர். உயர்மட்டக் குழு முன்பு இதன் செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.
டிஐஎஃப்ஆரின் மும்பையின் கொலாபா வளாகத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மூன்று வழி ஒத்துழைப்பாகும்.
விஞ்ஞானிகள் இப்போது செயல்பாட்டிற்குத் தயாராகும் முன் கணினி செயல்திறனின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்துவதில் பணியாற்றி வருகின்றனர். கல்வி, ஆராய்ச்சி மற்றும் இறுதியில் பகுப்பாய்வுக்கான சூப்பர் கண்டக்டிங் குவாண்டம் சாதனங்களை சோதிப்பதற்கான சோதனைக் களமாக இந்த அமைப்புக்கு பரந்த அணுகலை வழங்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.
எம்.பிரபாகரன்