மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை ஏற்பாடு செய்திருந்த கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் தொடர்பான மூன்று நாள் பயிலரங்கம் புதுதில்லியில் இன்று (28.08.2024) தொடங்கியது.
கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையின் கால்நடை பராமரிப்பு ஆணையர் (ஏ.எச்.சி) டாக்டர் அபிஜித் மித்ரா தொடங்கி வைத்த இந்த பயிலரங்கில், நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்தும், தடுப்பு, கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
கால்நடைகள், கோழி, வனவிலங்குகளை பாதிக்கும் நோய்கள், அவற்றால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களை டாக்டர் மித்ரா விளக்கினார். கண்காணிப்பு முயற்சிகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பயனுள்ள நோய் கட்டுப்பாட்டு திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது குறித்து இந்தப் பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
எம்.பிரபாகரன்