மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி காதி மஹோத்சவம், 2024 ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லஜே ஆகியோர் நாட்டில் காதியை மேம்படுத்துவதற்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் 2024 அக்டோபரில் ஏற்பாடு செய்யப்படவுள்ள காதிமகோத்சவம் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றியும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.  காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர்  திரு மனோஜ் குமார் மற்றும் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மக்கள் பங்களிப்பு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், திட்டங்களை அமல்படுத்துவதில் கவனம் செலுத்தும் அணுகுமுறை மற்றும் கதர் ஆடையை நாடு முழுவதும் பரவலாக விளம்பரப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் முயற்சியை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply