விமானவியல் தர உத்தரவாத தலைமை இயக்குநரகம் தனது 71 வது உதய தினத்தைக் கொண்டாடுகிறது.

விமானவியல் தர உத்தரவாத தலைமை இயக்குநரகம் தனது 71-வது உதய தினத்தை 2024, ஆகஸ்ட் 31 அன்று புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் கொண்டாடியது. பாதுகாப்பு உற்பத்தி செயலாளர்  திரு சஞ்சீவ் குமார் இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.  அவர் தமது உரையில், தலைமை இயக்குநரகத்தின் பயணத்தைப் பாராட்டினார். உலகளாவிய விமானவியல் நடைமுறைகளுக்கு ஈடுகொடுக்க மேம்பட்ட தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க இது காலத்தின் தேவை என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு உற்பத்திச் செயலாளர் மற்ற பிரமுகர்களுடன், தலைமை இயக்குநரகத்தின் அடிப்படை நிர்வாக ஆவணங்களை வெளியிட்டார். இது ராணுவ விமானப் போக்குவரத்தில் இந்திய தொழில்களுக்கு எளிதாக வணிகம் செய்வதை நோக்கி சுயாட்சியை வழங்குகிறது.

1954 முதல் 2024 வரையிலான இயக்குநரகத்தின் பயணம் மற்றும் இந்தியா முழுவதும் 50 நிறுவனங்களாக அதன் வளர்ச்சியை தலைமை இயக்குநர் திரு சஞ்சய் சாவ்லா எடுத்துரைத்தார். பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்பை அடைவதற்கான அதிவேக உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார்.

இந்திய விமானப்படை, ராணுவ விமானப் போக்குவரத்து, கடற்படை விமானப் போக்குவரத்து மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றுக்கான ராணுவ விமானப் போக்குவரத்துக் கிடங்குகளின் தர உத்தரவாதத்திற்கான ஒழுங்குமுறை ஆணையமாக இது செயல்படுகின்றது.

எம்.பிரபாகரன்

Leave a Reply