இலங்கையில் 19 -வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக 11 மனுக்களும், ஆதரவாக 5 மனுக்களும் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த 16 மனுக்கள் மீதான வழக்கு விசாரணை, இன்று (01.04.2015) தலைமை நீதிபதி கே.ஸ்ரீபவன் மற்றும் நீதிபதிகள் ஜே. சந்திரா ஏக்கநாயக்க, ஜே. பிரியாசாத் தீப் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழு முன்னிலையில், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இலங்கை பத்திரிகை நிறுவனம், இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெப் அலகரத்னம், மக்கள் ஐக்கிய முன்னணி சோமவீர சஞ்ஜீவ, எல்.ஜி. பெரேரா, வழக்கறிஞர் உதய கம்மம்பில, தர்சன வீரசேகர, வண. பெங்கமுவே நாளக தேரர், எஸ். வணிகசேகர, வண. மாதர ஆனந்த தேரர், டி. துவகே, மொஹமட் அப்பாஸ், வசந்த பிரியலால், கே.எஸ்.உபுல் பெர்ணாந்து நிசாந்த நலிந்த, வழக்கறிஞர் கோமின் தயாசிரி ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 19-வது அரசியலமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
வழக்கு விசாரணையை தொடர்ந்து இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட உள்ளது.
-வினித்.