நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் செயலாளரான டாக்டர் மனோஜ் கோவில், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள், செலவுகள் மற்றும் வருவாய் துறைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு, இயக்கத்தின் கீழ், 2024 செப்டம்பர் 20, அன்று மருத்துவ சுகாதார பரிசோதனை முகாமை நார்த் பிளாக்கில் தொடங்கி வைத்தார்.
நஜஃப்கரில் உள்ள கிராமப்புற சுகாதாரப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த இரண்டு பொது மருத்துவர்களும், புது தில்லி ஷார்ப் சைட் கண் மையத்தைச் சேர்ந்த ஒரு கண் மருத்துவரும், நார்த் பிளாக்கின் வளாகத்தில் அமைக்கப்பட்ட இரண்டு முகாம்களில் பல்வேறு சுகாதார பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.
17.09.2024 அன்று மருத்துவ இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள், அவர்களின் ஆய்வக அறிக்கைகளின் அடிப்படையில் மருத்துவர்களால் மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டனர்.
தூய்மை பணியாளர்களிடையே உரையாற்றிய டாக்டர் மனோக்கோவில்,மத்திய அரசின் திட்டமான பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் அடித்தட்டு மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீட்டை வழங்கப்படுகிறது என்று கூறினார். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க ஏற்பாடு துறைகளுக்கு உத்தரவிட்டார்.
ஒரு நாள் முகாம் மாலை வரை தொடர்ந்தது. இந்த முகாமில் தங்கள் சேவைகளை மருத்துவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் அளித்தனர். அவர்களைப் பாராட்டும் விதமாக கூடுதல் செயலாளர் (பணியாளர்), அவர்களின் விலைமதிப்பற்ற சேவைக்கான சான்றிதழ்கள் மற்றும் பூங்கொத்துகளையும் வழங்கினார்.
எம்.பிரபாகரன்