ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 57.31% வாக்குகள் பதிவு.

25.09.2024 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் இரண்டு செய்திக் குறிப்புகள் எண் 139 & 140-ன் தொடர்ச்சியாக, இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இரண்டாம் கட்ட தேர்தலில் 57.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் 2024-ல் 26 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாலின வாரியாக வாக்களித்த புள்ளிவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கட்டம் ஆண் வாக்காளர்கள்
 
பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்த வாக்குப்பதிவு
கட்டம் 2(26 தொகுதிகள்) 58.35% 56.22% 30.19% 57.31%

காலை 9.30 மணி முதல் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு செயலி மூலம் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடப்புகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு, வேட்பாளர்கள் / அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் நிறைவடைந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply