தர உத்தரவாதத் தலைமை இயக்குநரகம் தனது 68-வது அமைப்பு தினத்தைக் கொண்டாடியது.

தர உத்தரவாதத் தலைமை இயக்குநரகம் தனது 68-வது அமைப்பு தினத்தை 2024, செப்டம்பர் 27  அன்று கொண்டாடியது. பாதுகாப்பு த்துறை ஆயுதங்கள், கிடங்குகள் மற்றும் உபகரணங்களின் தரத்தை உறுதி செய்வதற்கான பயணத்தில் இந்த நாள் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்திய ராணுவ உபகரணங்களுக்குக் கடுமையான தரங்களை நிர்ணயிப்பதிலும் செயல்படுத்துவதிலும் தர உத்தரவாத இயக்குநரகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கும் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவதற்கும் மாபெரும் சீர்திருத்தத்தை நோக்கி, தர உத்தரவாத செயல்முறைகள் மற்றும் சோதனைகளை விரைவுபடுத்துதல், முடிவெடுத்தலின் அடுக்குகளைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில்  தர உத்தரவாதத் தலைமை இயக்குநரகத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட கட்டமைப்பு அனைத்து நிலைகளிலும் முழுமையான உபகரணங்கள் / ஆயுத தளத்திற்கான ஒற்றைப் புள்ளி தொழில்நுட்ப ஆதரவை செயல்படுத்தும். தயாரிப்பு அடிப்படையிலான தர உத்தரவாதத்தில் சீரான தன்மையை உறுதி செய்யும்.

சான்று வரம்புகளையும்  சோதனை வசதிகளையும்  வெளிப்படைத் தன்மையுடன் ஒதுக்கீடு செய்ய ஏதுவாக பாதுகாப்பு சோதனை மற்றும் மதிப்பீட்டு மேம்பாட்டு இயக்ககம் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. தரப்படுத்தப்பட்ட தர உத்தரவாத செயல்முறைகளின் தானியங்கி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுடன் இணைந்த இந்த ஏற்பாடு பாதுகாப்புத் தொழில்துறையின் ஈடுபாட்டை கணிசமாக மேம்படுத்தும். உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகள் இப்போது தர உத்தரவாதத் தலைமை இயக்குநரகத்தின் ஆதார வரம்புகள் மற்றும் ஆய்வகங்களின் சோதனை வசதிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. இது ‘வர்த்தகம் செய்வதை எளிதாக்க’ உதவும்.

Leave a Reply