நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் அஞ்சல் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது: போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கிருஷ்ண குமார் யாதவ்.

அஞ்சல் துறையின் நிறுவன நாளையொட்டி அகமதாபாத் தலைமை அஞ்சலகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் வடக்கு குஜராத் பிராந்திய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு கிருஷ்ண குமார் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர்,  நாட்டின் பழமையான துறைகளில் ஒன்றான அஞ்சல் துறை, சமூக – பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அக்டோபர் 1, 1854 இல் நிறுவப்பட்ட அஞ்சல் துறை அதன் 170 ஆண்டுகால பயணத்தில் பல வரலாற்று மற்றும் சமூக-பொருளாதார நிகழ்வுகளைக் கண்டுள்ளது என்றார்.

 அஞ்சல் துறை என்பது கடிதங்கள், பார்சல்கள் மற்றும் பணவிடைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்றும்  ஒரே கூரையின் கீழ் பலதரப்பட்ட சேவைகளை வழங்குவதிலும், நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் இந்தியா, அந்த்யோதயா ஆகியவற்றிற்கு பங்களிப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.  சேமிப்பு வங்கிகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பாஸ்போர்ட் சேவை மையங்கள், ஆதார் பதிவு உட்பட குடிமக்களை மையமாகக் கொண்ட பல்வேறு முயற்சிகள்  அஞ்சலகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply