வேலைவாய்ப்பு தரவு குறித்த உயர்மட்டக் கூட்டம்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்.

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்  துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா நேற்று (07.10.2024) புதுதில்லியில் வேலைவாய்ப்புத் தரவுகள் குறித்தும் வெளிநாட்டு குடியேற்றங்கள் தொடர்பாகவும் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜேவும் கலந்து கொண்டார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வேலை வாய்ப்புகளுக்காகவும், கல்விக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்களின் முழுமையான தரவுகளை பராமரிக்க வேண்டிதன் அவசியத்தை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா எடுத்துரைத்தார். தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம்,  இஷ்ரம் தளம், மாநில வேலைவாய்ப்பு தளங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு தரவுகளை ஒருங்கிணைப்பதில் தொழில்துறை சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். பல்வேறு அமைச்சகங்களில் இருந்து வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்களை தொகுப்பதற்கு உதவும் அமைப்பாக நித்தி ஆயோக் செயல்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

வேலைவாய்ப்பு தரவு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாகவும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply