பிரதமர் நரேந்திர மோதி, அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று குஜராத் செல்கிறார். காலை 10 மணியளவில், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்செஸுடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாக பிரதமர் திறந்து வைப்பார். அதன்பிறகு காலை 11 மணியளவில் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார். வதோதராவிலிருந்து அம்ரேலி செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவாரைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3 மணியளவில், அம்ரேலியில் உள்ள லாத்தியில் ரூ .4,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

வதோதராவில் பிரதமர்.

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்செஸும் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். சி -295 திட்டத்தின் கீழ் மொத்தம் 56 விமானங்கள் உள்ளன, அவற்றில் 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து ஏர்பஸ் மூலம் நேரடியாக வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 40 இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இந்த 40 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் பொறுப்பில் உள்ளது. இந்த வசதி இந்தியாவில் ராணுவ விமானங்களுக்கான முதல் தனியார் துறை இறுதி அசெம்பிளி லைன் (எஃப்ஏஎல்) ஆகும். இது உற்பத்தி முதல் அசெம்பிளி வரை, சோதனை மற்றும் தகுதி வரை, விநியோகம் முதல்  பராமரிப்பு வரை விமானத்தின் முழுமையான சூழல் அமைப்பின் முழு வளர்ச்சியை இது உள்ளடக்கியிருக்கும். 

டாடா தவிர, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்களிக்கும்.

முன்னதாக 2022 அக்டோபரில், வதோதரா  அசெம்பிளி லைன்  திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

டாடா தவிர, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்களிக்கும்.

முன்னதாக 2022 அக்டோபரில், வதோதரா இறுதி அசெம்பிளி லைன் (FAL) திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply