அணுசக்தி ஆணையத்தின் (AEC) தலைவரும், அணுசக்தித் துறையின் (DAE) செயலாளருமான டாக்டர் ஏ.கே.மொஹந்தி 2024 அக்டோபர் 23 அன்று தால்சரில் உள்ள கனநீர் வாரிய வசதிகளில் மின்னணு தர போரான் -11 (B11) செறிவூட்டல் வசதியைத் தொடங்கி வைத்தார்.
தல்சரில் உள்ள ஹெச்டபிள்யூபிஎஃப்-ல் பி11 செறிவூட்டலை மின்னணு தரத்திற்கு (>99.8%) தொடங்கியதன் மூலம், இப்போது இந்தியா இந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். எலக்ட்ரானிக்ஸ் கிரேடு பி11பிஎஃப்3 வாயுவின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இது குறைக்கடத்தி சில்லுகளின் உற்பத்தியில் பி-வகை டோபண்டாகப் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் மும்பை கனநீர் வாரியத்தின் துணைப் பிரிவான தால்ச்சரில் உள்ள ஹெச்டபிள்யூபிஎஃப், அணுசக்தி மற்றும் அணுசக்தி அல்லாத பயன்பாடுகளுக்கான பல்வேறு சிறப்பு பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னோடியாக உள்ளது. போரான்-10 (B10) ஐசோடோப்புகளின் அணுக்கரு கட்டுப்பாட்டு தண்டு தரம் (> 67% IP ) மற்றும் நியூட்ரான் டிடெக்டர் தரம் (>96% IP) ஆகியவற்றின் உற்பத்தியில் இந்த அலகு ஈடுபட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா