இந்த நிதியாண்டில் 2024 செப்டம்பர் மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: –
மத்திய அரசு ரூ. 16,36,974 கோடியைப் பெற்றுள்ளது (செப்டம்பர் 2024 வரையிலான மொத்த வரவுகளில் 2024-25 உடன் தொடர்புடைய பிஇ-யில் 51.0%).
ரூ. 12,65,159 கோடி வரி வருவாய் (மத்திய அரசுக்கான நிகர வருவாய்).
ரூ. 3,57,214 கோடி வரி அல்லாத வருவாய்.
இந்த காலகட்டம் வரை மத்திய அரசால் வரிகளின் பகிர்வு பங்காக ரூ.5,44,803 கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.89,359 கோடி அதிகமாகும்.
மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ. 21,11,494 கோடி (2024-25 பட்ஜெட்டில் 43.8%). இதில் ரூ. 16,96,528 கோடி வருவாய் கணக்கிலும், ரூ. 4,14,966 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது.
மொத்த வருவாய் செலவினத்தில், ரூ.5,15,010 கோடி வட்டி செலுத்துதலுக்காகவும், ரூ.2,14,658 கோடி முக்கிய மானியங்களுக்காகவும் உள்ளது.
எம்.பிரபாகரன்