மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், 2024 அக்டோபர் 29 அன்று கொலம்பியாவின் காலியில் நடைபெற்ற உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டின் 16-வது உயர்மட்ட கூட்டத்தில் உயிரியல் வளங்களின் பாதுகாப்பு தொடர்பான தேசிய அறிக்கையை வழங்கினார்.
கொலம்பியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திருமதி சுசானா முகமது, சிஓபி தலைவராக நீண்டகாலம் பணியாற்றிய சீனாவின் திரு ஹுவாங் ருன்கியூவிடமிருந்து பொறுப்பேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு சிங், அன்னை பூமியை வழிபடுவதிலும், இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதிலும் இந்தியா வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று கூறினார். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 36 பல்லுயிர் ஹாட்ஸ்பாட்களில் நான்கைக் கொண்ட உலகின் 17 மெகா பன்முகத்தன்மை கொண்ட பணக்கார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். “நமது சொந்த தாய்மார்களை கௌரவிப்பது போல, பூமித்தாயை கௌரவிப்பதற்காக, நமது பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நமது கூட்டு முயற்சிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நமது பிரதமர், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்னும் நாடு தழுவிய மரம் நடும் பிரச்சாரத்தை தொடங்கினார்” என்று அவர் கூறினார்.
உலகின் ஏழு பெரும் பூனை இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச பெரும் பூனை கூட்டணியை நிறுவியதன் மூலம் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது, ஏனெனில் அவற்றின் இருப்பு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வளமான பல்லுயிர் பெருக்கத்தை குறிக்கிறது என்று திரு சிங் தெரிவித்தார்.
‘கங்கை புத்துயிரூட்டல்’ இயக்கத்தின் மூலம் நமது புனித நதியான கங்கைக்கு புத்துயிரூட்டுவதற்கான இந்தியாவின் முயற்சிகள், நதிக்கரை சுற்றுச்சூழல் அமைப்பை புதுப்பிக்கும் முதல் 10 உலக மறுசீரமைப்பு முன்னோடி கப்பல்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். இந்தியாவின் ராம்சார் தளங்கள் 2014 முதல் 26 லிருந்து 85 ஆக உயர்ந்துள்ளன என்றும் இந்த எண்ணிக்கை விரைவில் 100 ஐ எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘வசுதைவ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற உண்மையான உணர்வுடன், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக தனது சொந்த மற்றும் உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி திரு சிங் தமது உரையை நிறைவு செய்தார்.
எம்.பிரபாகரன்