என்டிபிசி நிறுவனம் டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து ஃப்ளூ கேஸ் கரியமில வாயுவிலிருந்து மெத்தனால் உற்பத்திக்கான உள்நாட்டு கிரியா ஊக்கியை உருவாக்கியுள்ளது.

கார்பன் (CO2) வெளியேற்றம் என்பது புதைபடிவ எரிபொருள் மின் உற்பத்தி நிலையம் எதிர்கொள்ளும் முக்கியமான சவாலில் ஒன்றாகும். எனவே, ஃப்ளூ வாயுவிலிருந்து சிஓ2 -வைப்(CO2) பிரித்து மதிப்புமிக்க எரிபொருளாகவும் ரசாயனங்களாகவும் மாற்ற உலகளவில் கவனம் செலுத்தப்படுகிறது.

டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்துடன் (IIP) இணைந்து கரியமில வாயுவை மெத்தனாலுக்கு ஹைட்ரஜனேற்றம் செய்வதற்கான உள்நாட்டு வினையூக்கியை என்டிபிசி-யின் ஆராய்ச்சி – மேம்பாட்டு பிரிவான நேத்ரா உருவாக்கியுள்ளது.

எந்தவொரு வேதியியல் தொகுப்பிற்கும் வினைவேக மாற்றி இன்றியமையாத பகுதிப்பொருளாகும். வினையூக்கியின் சிறப்பியல்புகளுக்குப் பிறகு, வினையூக்கியின் நீண்ட கால அளவு மற்றும் தர செயல்திறன் மதிப்பீடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 10 கிலோகிராம் மெத்தனால் முன்னோட்ட பரிசோதனை ஆலையில் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த வினையூக்கியால் உற்பத்தி செய்யப்படும் மெத்தனாலின் தூய்மை 99%-க்கும் அதிகமாக உள்ளது.

என்டிபிசிக்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமான என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட், உலகளாவிய பருவநிலை மாற்ற நடவடிக்கை இலக்குகள் மற்றும் 2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் இலக்குக்கு ஏற்ப, கார்பன் தடத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply