உத்தராகண்ட் மாநிலத்தில் குடிநீர் விநியோகம், சுகாதாரம், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பிற நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த உதவுவதற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் இன்று 200 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
உத்தராகண்ட் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை இணைச் செயலாளர் திருமதி ஜூஹி முகர்ஜி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியாவிற்கான இயக்குநர் மியோ ஓகா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தத் திட்டம் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்கான உத்தராகண்ட் அரசின் முன்முயற்சிக்கு இசைவானதாக உள்ளது. நகரங்களில் வாழ்வாதாரத்தையும் நிலைத்தன்மையையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று திரு ஜூஹி முகர்ஜி கூறினார்.
வெள்ளம், நிலச்சரிவு போன்ற பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது உத்தராகண்ட் மக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என்று மியோ கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா