மருத்துவ சாதனங்கள் தொழில்துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை வழங்குவதற்காக, மத்திய ரசாயனம், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா மருத்துவ சாதனத் தொழிலை வலுப்படுத்தும் திட்டத்தை இன்று (08.11.2024) தொடங்கி வைத்தார். துறையின் இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், மருந்துகள் துறை செயலாளர் திரு அருணீஷ் சாவ்லா, துறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம் மருத்துவ சாதனத் துறையின் முக்கியமான பகுதிகளை இலக்காகக் கொண்ட ஒரு விரிவான திட்டமாகும், இது முக்கிய கூறுகள் மற்றும் பாகங்கள் உற்பத்தி, திறன் மேம்பாடு, மருத்துவ ஆய்வுகளுக்கான ஆதரவு, பொதுவான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா, இந்தத் திட்டம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இது தொழில்துறைக்கு உதவுவது மட்டுமல்லாமல், இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுவதில் வேகமானதாக இருக்கும் என்றும் கூறினார். “இந்த நடவடிக்கைகள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் விளைவுகள் பெரியவை. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒரு செயல் அரசு என்றும், பி.எல்.ஐ திட்டமே புதிய பாதைகளைத் திறந்துள்ளது என்றும் அவர் கூறினார். “இது ஒரு தொடக்கம் மட்டுமே” என்று கூறிய அமைச்சர், இந்த முயற்சிகளுக்காக மருந்துத் துறையை வாழ்த்தியதுடன், திட்டத்தின் வெற்றிக்கு தொழில்துறையின் ஆதரவைக் கோரினார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார், மேலும் அனைத்து ஆதரவையும் வழங்க இத்துறை உள்ளது என்று கூறி, அரசிடமிருந்து அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தொழில்துறைக்கு உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், இந்தத் திட்டம் மருத்துவக் கருவிகளின் ஒட்டுமொத்த துறைக்கும் ஊக்கமளிக்கும் என்றார். “மருத்துவ சாதனம் சுகாதாரத் துறையின் ஒரு முக்கியமான தூணாக மாறியுள்ளது, அவற்றை அன்றாட வாழ்க்கையில் நாம் காண்கிறோம், அதன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவார்கள். இந்தத் தொழிலை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் திட்ட ஆதரவையும் அரசு உருவாக்கி வருகிறது” என்றார்.
திவாஹர்