க.அன்பழகன் மனு : ஏப்ரல் 21 ஆம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணை!

scmidSC

ஜெ.ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானதை எதிர்த்த க.அன்பழகன் மனு மீதான விசாரணை, வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனுவை விசாரிக்கும் அமர்வில் இடம்பெறும் நீதிபதிகள் பெயரை பின்னர் தலைமை நீதிபதி தத்து அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் இன்று (16.04.2015) தெரிவித்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in