அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் நீட்டிப்பு!  

Hon'ble Mr. Justice H.L. Dattu.

Hon’ble Mr. Justice H.L. Dattu.

sr%20790014p sr%20790014p2

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா வழக்கில், ஏற்கனவே ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் 2 மாதம் ஜாமீன் வழங்கியிருந்தது. 2 மாதம் முடிந்ததும், மீண்டும் டிசம்பர் 18-ம் தேதியிலிருந்து 4 மாத காலம் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் டிசம்பர் 18- ல் வழங்கப்பட்ட  ஜாமீன் இன்றுடன் (17.04.2015) முடிவடைந்தது.

இதனையடுத்து ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீனை நீட்டிக்க கோரிய மனு இன்று (17.04.2015)  விசாரணைக்கு வந்தது.

Hon'ble Mr. Justice Arun Mishra.

Hon’ble Mr. Justice Arun Mishra.

Untitled1Untitled

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மே 12 ஆம் தேதி வரை 4 பேருக்கும் ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது.

மேலும், ஜெ.ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் மே 12 ஆம் தேதி வரை தீர்ப்பு வழங்க வேண்டாம் என்றும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in