ஆக்ரா விமானப்படை நிலையத்தில் சி-295 முழுமையான மோஷன் சிமுலேட்டர் தொடக்க விழா.

ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், சி -295 ஃபுல் மோஷன் சிமுலேட்டர் (எஃப்எம்எஸ்) வசதியை ஆக்ரா விமானப்படை நிலையத்தில்  நவம்பர் 11-ம் தேதி திறந்து வைத்தார். விமானியின் பயிற்சியில் கணிசமான பகுதியை இந்த சிமுலேட்டரில் மேற்கொள்ள முடியும். இதனால் விமானத்தில் விலைமதிப்பற்ற பறக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஏர்லிஃப்ட், பாரா-டிராப்பிங், பாரா-ட்ரூப்பிங், மருத்துவ வெளியேற்றம், பேரழிவு நிவாரணம் போன்ற பல்வேறு பணிகளை உருவகப்படுத்துவதன் மூலம் விமானிகளுக்கு யதார்த்தமான சூழலில் பயிற்சி அளிக்க அதிநவீன சிமுலேட்டர் உதவுகிறது. மேலும் உண்மையான நடவடிக்கைகளில் எதிர்கொள்ளக்கூடிய பல முக்கியமான சூழ்நிலைகளை உருவகப்படுத்தவும் உதவுகிறது. நமது விமானிகள் போருக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்கிறது. இது முக்கியமான முடிவுகள் தேவைப்படும் அதிக ஆபத்துள்ள அவசரநிலைகளைக்    கையாள்வதில் விமானிகள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள அனுமதிக்கும். இதன் மூலம் ராணுவ நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விமான பாதுகாப்பை மேம்படுத்தும்.

இந்திய விமானப்படையில் சி-295 விமானங்களை இயக்குவதன் மூலம், நாட்டின் விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். இது இந்தியாவில் தனியார் துறை போக்குவரத்து விமான உற்பத்தியில் “தற்சார்பு இந்தியாவின்” தொடக்கத்தைக் குறிக்கும்.

Leave a Reply