உயர், தொழில்நுட்பக் கல்விக்கான தேசிய பயிலரங்கை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் செயலாளர்களுடன் இணைந்து தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் செயலாளர்களுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்வி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தாரும் கலந்து கொண்டார். உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி, உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் திரு சுனில் குமார் பர்ன்வால், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர், பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார், உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் திருமதி மன்மோகன் கவுர், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் செயலாளர்கள், கல்வியாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பிரதான், பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்த தேசிய முன்னுரிமைகளை அடைவது, வாழ்க்கையை எளிதாக்குவது, தனிநபர் வருமானத்தை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு கல்வி எவ்வாறு கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பது குறித்து கல்வி விவாதத்திற்கான தளமாக இந்தப் பயிலரங்கு செயல்படும் என்று கூறினார். தொழில்துறை 4.0 வழங்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், பொருளாதாரத்தை உற்பத்தி செய்யும் நாடாக மாற வேண்டும் என்றும், உலகத் தரத்திற்கும் மேலான கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply