இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் 2024 நவம்பர் 12, அன்று மின்னணு வர்த்தக உணவு வணிக செயல்பாட்டாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி தலைமையில், நடைபெற்ற இக்கூட்டம் மின்னணு வர்த்தக உணவு வணிக செயல்பாட்டாளர்களுக்கான இணக்கத் தேவைகளை வலுப்படுத்துவதை நோக்கமாக் கொண்டது.
ஆன்லைனில் ஆதாரமற்றவைகளை வெளியிட வேண்டாம் என்று உணவு வணிக செயல்பாட்டாளர்களை இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய தலைமைச் செயல் அதிகாரி அப்போது எச்சரித்தார். இது தவறான தகவல்களைத் தடுக்கும் மற்றும் துல்லியமான தயாரிப்பு விவரங்களுக்கான நுகர்வோரின் உரிமையைப் பாதுகாக்கும் என்று அவர் கூறினார். நுகர்வோர் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதிலும் ஆன்லைன் தளங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். செல்லுபடியாகும் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய உரிமம் அல்லது பதிவு இல்லாமல் எந்தவொரு உணவு வணிக செயல்பாட்டாளரும் எந்த மின்னணு வர்த்தக தளத்திலும் செயல்பட முடியாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து நேரடியாகவும் காணொலிக் காட்சி வாயிலாகவும் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திவாஹர்