இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான ‘சீ விஜில்-24, என்ற கடல் கண்காணிப்பு-24 பயிற்சியை ‘நவம்பர் 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த உள்ளது. 06 அமைச்சகங்கள், 21 அமைப்புகள் மற்றும் முகமைகளின் பங்கேற்புடன் இப்பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு, தேசிய பாதுகாப்பு குழும செயலக அதிகாரிகள், மாநில கடல்பகுதி காவல் துறை, கடலோர காவல்படை, சுங்கத்துறை, மீன்வளத்துறை போன்றவற்றின் பணியாளர்களுடன், இந்திய கடற்படை தலைமையிலான குழுக்களின் ஒரு பகுதியாக பங்கேற்பார்கள்.
துறைமுகங்கள், எண்ணெய் கிணறுகள், கடலோர மக்கள் உள்ளிட்ட முக்கிய கடலோர உள்கட்டமைப்பு போன்ற கடலோர சொத்துக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்த பயிற்சி கவனம் செலுத்தும். இந்த ஆண்டு பிற சேவைகளின் (இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை) பங்கேற்பு மற்றும் அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் மற்றும் விமானங்களை நிறுத்துவது ஆகியவை பயிற்சியின் விரைவை அதிகரித்துள்ளன.
எம்.பிரபாகரன்