ஒடிசா ஜெகந்நாதர் கோவிலில் பேட்டரியில் இயங்கும் 10 வாகனங்களை மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கொடியசைத்து இயக்கி வைத்தார்.

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்தில் பேட்டரியில் இயங்கும் 10 வாகனங்களை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று கொடியசைத்து அவற்றின் இயக்கத்தைத்  தொடங்கி வைத்தார். இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின்  (ஐஆர்இடிஏ)  பெரு நிறுவன சமூகப் பொறுப்புடைமையின் கீழ்  மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்தை மேம்படுத்துவதோடு  பார்வையாளர்களின்அனுபவத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக இது மூத்த குடிமக்கள்  மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பயனளிக்கிறது.

மத்திய அமைச்சர் திரு ஜோஷி, வாகன சாவிகளை ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியிடம் ஒப்படைத்தபோது, கலாச்சார அடையாளங்களில் நிலையான தீர்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை நிறுத்துவது பசுமை ஆற்றலுக்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும்  பார்வையாளர்கள் எளிதில் இந்த வசதியை அணுகக்கூடிய தாகவும்  சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வாய்ப்பையும் வழங்குகிறது. இது போன்ற நிலையான சமூக பொறுப்புடைமை திட்டங்களை ஆதரிப்பதில் ஐஆர்இடிஏ-வின் முயற்சிகள், நாட்டின் பசுமை பணிக்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க பாரம்பரிய தலங்களில் பார்வையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதையும் பிரதிபலிக்கின்றன என்று கூறினார்.

ஐஆர்இடிஏ-வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ பிரதீப் குமார் தாஸ், நிலைத்தன்மைக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்து, “எங்கள் சிஎஸ்ஆர் முன்முயற்சிகள் மூலம் பாரம்பரிய தலங்களின் 10 சுற்றுச்சூழல் நட்பு வாகனங்கள் மேம்பாட்டிற்கு பங்களிப்பதில் ஐஆர்இடிஏ பெருமை கொள்கிறது. இந்தத் திட்டம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை இயக்குவதற்கான எங்கள் நோக்கத்துடன் ஒத்துப்போவதுடன் பார்வையாளர்களுக்கு சுற்றுச்சூழல் நட்பு இயக்கம் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் இயக்குநர் (நிதி) டாக்டர் பி.கே.மொஹந்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், ஸ்ரீ ஜகந்நாதர் கோயில் நிர்வாகம் மற்றும் ஐ.ஆர்.இ.டி.ஏ ஆகியவற்றின் பிற மூத்த அதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர், ஐஆர்இடிஏ தலைவர் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் ஐஆர்இடிஏ ஆகியவற்றின் பிற அதிகாரிகள் ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு நடத்தினர்.

Leave a Reply