அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர், இவர் உறவினர் பாலமுருகன் என்பவருடன் இலைகடம்பூரிலிருந்து செந்துறைக்கும் இடையே உள்ள பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த அசோக் என்பவர், பயங்கர ஆயுதங்களுடன் 10 பேர் அடங்கிய நபர்களுடன் வந்து, ராஜசேகரை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகர் உயிர் இழந்தார்.
இதை கண்ட பாலமுருகன் அங்கிருந்து தப்பி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியில் யார் யார் செயல்பட்டார்கள்? என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in