முன் விரோதம் காரணமாக பட்டப் பகலில் இளைஞர் வெட்டிக்கொலை! -திருச்சியில் நடந்த பயங்கரம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு அருகில் உள்ள கொடியாலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர், இன்று (15.11.2024) காலை தனது ஊரில் இருந்து புறப்பட்டு மெயின் ரோட்டுக்கு வந்து சத்திரம் பேருந்து நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். விஷ்ணு பயணம் செய்த அரசு பேருந்தை பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல். திண்டுக்கரை என்ற நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது பேருந்தை பின்தொடர்ந்து வந்த அந்த கும்பலில் இருந்த ஒருவன் அந்த பேருந்தில் ஏறி பஸ்ஸில் இருந்த விஷ்ணு என்ற அந்த இளைஞரை கீழே இறக்கி பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் விஷ்ணுவை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து தனிப்படை அமைத்து கொலை கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பஸ்ஸில் பயணம் செய்த இளைஞரை பட்டப்பகலில் படுகொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்விரோதம் காரணமாகதான் இந்த படுகொலை இன்று நடந்துள்ளது. ஆம், ஏற்கனவே அதே ஊரைச் சேர்ந்த கோகுல் என்ற நபரை படுகொலை செய்த வழக்கில் இன்று உயிரிழந்த விஷ்ணு என்பவருக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது. அதற்குப் பழி தீர்ப்பதற்காக தான் கோகுல் அண்ணன் தலைமையிலான கும்பல் விஷ்ணுவை பின் தொடர்ந்து வந்து இந்த படுகொலையை பட்ட பகலில் இன்று அரங்கேற்றுள்ளது.

Leave a Reply