மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் ஆணையங்களில் உள்ள காலி பணியிடங்களை மத்திய நுகர்வோர் நலத் துறை ஆய்வு செய்தது.

நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் ஆணையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தை மத்திய நுகர்வோர் நலத் துறை நடத்தியது. துறையின்  செயலாளர் திருமதி நிதி காரே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள  துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நுகர்வோர் பிரச்சனைகள் / வழக்குகள் உடனடியாகவும், திறமையாகவும் கையாளப்படுவதை உறுதி செய்ய காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுவது அவசியம் என்று திருமதி நிதி காரே  கூறினார். நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் ஆணையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நுகர்வோரின் குறைகள் விரைவாகவும் திறம்படவும் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பின்பற்றி இந்த நடவடிக்கைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சேவையின் தரத்தை நிலைநிறுத்துவதற்கும் நுகர்வோர் ஆணையங்களின் திறமையான செயல்பாடு முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளை வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் உள்ள காலி பணியிட தரவுகளை ஆழமாக பகுப்பாய்வு செய்ய இந்த கூட்டம் உதவியது. 2024, அக்டோபர்  நிலவரப்படி, மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் குறிப்பிடத்தக்க காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநில ஆணையங்களில் 18 தலைவர் பணியிடங்களும், 56 உறுப்பினர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதேபோல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆணையங்களில் 162 தலைவர் பணியிடங்களும், 427 உறுப்பினர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அனைவரின் சிறந்த முயற்சிகளையும் மீறி, நுகர்வோர் ஆணையங்களில் காலிப்பணியிடங்கள்.

Leave a Reply