குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 18, 2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவிட்சர்லாந்து, ஜோர்டான், பப்புவா நியூ கினியா, தென்னாப்பிரிக்கா, மியான்மர், எகிப்து ஆகிய நாடுகளின் தூதர்கள் / ஹைகமிஷனர்களிடமிருந்து அவர்களின் நியமனப் பத்திரங்களைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். தங்கள் நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தவர்கள் விவரம் வருமாறு:
1.சுவிட்சர்லாந்து தூதர் மேன்மைதங்கிய திருமதி மாயா திசாஃபி
2.ஜோர்டான் ஹஷ்மிட்டே அரசின் தூதர் மேன்மைதங்கிய திரு யூசெஃப் முஸ்தஃபா அலி அப்தெல் கனி
3. பப்புவா நியூ கினியா ஹைகமிஷனர் மேன்மைதங்கிய திரு வின்சென்ட் சுமாலே
4. தென்னாப்பிரிக்கக் குடியரசின் ஹைகமிஷனர் மேன்மைதங்கிய பேராசிரியர் அனில் சுக்லால்
5. மியான்மர் ஒன்றியக் குடியரசின் தூதர் மேன்மைதங்கிய திரு ஸா ஊ
6. எகிப்து அராப் குடியரசின் தூதர் மேன்மைதங்கிய திரு கமல் ஸயீத் கலால்.
திவாஹர்