பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2024 நவம்பர் 18 அன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் இந்தியா இத்தாலி ராஜாங்க கூட்டாண்மையின் இணையற்ற ஆற்றலுக்கு, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைக்கான கூட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மேலும் உத்வேகம் அளிக்க முடிவு செய்தனர். இந்த நோக்கத்திற்காக, இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.
ஒரு அரசின் தலைவர்கள், வெளிநாட்டலுவல்கள், வர்த்தக மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையில் பல்தரப்பு நிகழ்வுகள் உட்பட வழக்கமான அடிப்படையில் சந்திப்புகள் மற்றும் பரஸ்பர பயணஙகளைப் பேணுதல்,
வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் உட்பட மூத்த அதிகாரிகள் மட்டத்தில் இரு வெளிநாட்டு அமைச்சகங்களுக்கிடையில் வருடாந்திர இருதரப்பு ஆலோசனைகளை தொடர்ந்து நடத்துதல்,
பொதுவான அக்கறையுள்ள அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த மற்ற அமைச்சகங்களின் தலைவர்களிடையே கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இருதரப்பு வர்த்தகம், சந்தை அணுகல் மற்றும் முதலீட்டை, குறிப்பாக போக்குவரத்து, வேளாண் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், ரசாயன மருந்துகள், மரம் மற்றும் மரச்சாமான்கள், முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உணவு பதனப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் குளிர்பதன சங்கிலி, பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் நீடித்த நகர்வு போன்ற துறைகளில் இருதரப்பு வர்த்தகம், சந்தை அணுகல் மற்றும் முதலீட்டை அதிகரிக்க பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையம் மற்றும் உணவு பதப்படுத்துதல் குறித்த இத்தாலி-இந்தியா கூட்டு பணிக்குழுவின் பணிகளை பயன்படுத்துதல். பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க இசைவு தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
கைத்தொழில் மற்றும் பொருளாதார சங்கங்கள், வர்த்தக குழுமங்களின் ஈடுபாட்டுடன் வர்த்தக சந்தைகள் மற்றும் காலத்திற்குரிய வர்த்தக அரங்குகளில் பங்குபற்றுதலை மேம்படுத்துதல்.
வாகனம், குறைகடத்திகள், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் தொழில்துறை கூட்டாண்மை, தொழில்நுட்ப மையங்கள் மற்றும் பரஸ்பர முதலீடுகளை ஊக்குவித்தல்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் பின்னணியில் நீடித்த போக்குவரத்தில் ஒத்துழைப்பை வளர்த்தல்.
இந்தியா-மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEEC) கட்டமைப்புக்கு உட்பட்டு கடல்சார் மற்றும் நில உள்கட்டமைப்பிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல். கடல்சார் மற்றும் துறைமுகத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தல்.
தொலைத்தொடர்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் சேவைகளில் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற துறைகளில் இரு நாடுகளிலும் தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலி கூட்டாண்மைகளை உருவாக்குதல், முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்.
தொழில் துறை 4.0, மேம்பட்ட உற்பத்தி, தூய்மையான எரிசக்தி, முக்கிய கனிமங்கள் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு, கல்வியாளர்கள் மற்றும் இரு நாடுகளின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உள்ளிட்ட தொழில்கள் சம்பந்தப்பட்ட புதிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்தல்.
இத்தாலி மற்றும் இந்தியாவின் தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, பொதுவான அக்கறை உள்ள துறைகளில் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியின் பின்னணியில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை அதிகரித்தல், குறிப்பாக ஸ்டெம் களத்தில், உதவித்தொகைகளில் கவனம் செலுத்துதல், அதே நேரத்தில் முன்னணி அறிவியல் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத் திட்டங்களுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்த்தல்.
இரு நாடுகளின் புதிய தொழில்கள் மற்றும் தொடர்புடைய புதுமை சூழல் அமைப்புகளுக்கு இடையே கலந்துரையாடலை ஊக்குவித்தல். ஃபின்டெக், எஜூடெக், ஹெல்த் கேர், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின், அக்ரிடெக், சிப் வடிவமைப்பு மற்றும் கிரீன் எனர்ஜி ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.
திவாஹர்