விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு அமைச்சரை விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் வரவேற்றார். இந்திய விமானப் படையின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில்உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தப் படையின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைக்கு பாராட்டு தெரிவித்தார். வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்ப இந்திய விமானப்படையின் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், நமது தேசிய நோக்கங்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, திறன் மேம்பாட்டு நடைமுறையை மேலும் திறமையாகவும், சிறப்பாகவும் மாற்றுவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு பாதுகாப்பு அமைச்சகத்தின் தளபதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
தற்போதைய மாநாடு முக்கிய செயல்பாட்டு, நிர்வாக மற்றும் உத்தி சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆழமான விவாதங்களை நடத்தியது.
தற்போதைய சவால்கள் குறித்து விவாதிப்பதற்கும், பாதுகாப்பு திறன்களில் செயல்பாட்டு சிறப்பையும் தற்சார்பையும் பராமரிக்க எதிர்கால நடவடிக்கைகள் பற்றி உத்திகள் வகுப்பதற்கும் இந்திய விமானப்படையின் மூத்த தலைமைக்கு இந்த மாநாடு ஒரு முக்கிய தளமாக அமைகிறது.
புதுதில்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இந்த மாநாட்டில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்புத் துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், டிடிஆர்டிஓ செயலாளரும் தலைவருமான டாக்டர் சமீர் வி.காமத், செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) திரு சஞ்சய் குமார் மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த தளபதிகள் கலந்து கொண்டனர்.

திவாஹர்