ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியின் நேபாள பயணம்.

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி 2024 நவம்பர் 20 முதல் 24 வரை நேபாளத்தில் பயணம் மேற்கொள்கிறார். இது இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையிலான நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2024 நவம்பர் 20 அன்று, ஜெனரல் உபேந்திர திவேதி நேபாளத்திற்கான இந்திய தூதர் திரு நவீன் ஸ்ரீவஸ்தவாவுடன் உரையாடுகிறார். அதன் பின்னர் சஷி பவனில் நேபாள ராணுவத் தளபதி ஜெனரல் அசோக் ராஜ சிக்டெலுடன் கலந்துரையாடுகிறார்.

நவம்பர் 21   அன்று, நேபாள ராணுவ தலைமையகத்தில் ராணுவத் தளபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர், நேபாள ராணுவத் தளபதியுடன்  விவாதிக்கவுள்ளார். ஜெனரல் உபேந்திர திவேதிக்கு நேபாள ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் பொதுவான நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விளக்கமளிப்பார். அதன்பிறகு, அவர் ஷித்தல் நிவாஸில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார். அங்கு இந்திய ராணுவத்திற்கும், நேபாள ராணுவத்திற்கும் இடையிலான தனித்துவமான பாரம்பரியத்தின்படி, அவருக்கு நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவி நேபாள அதிபரால் வழங்கப்படும்.

Leave a Reply