படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் தொகுப்பின் முதல் முன்மாதிரி தயாரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் கள சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். சோதனைகளை வெற்றிகரமாக முடித்த பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படும்.
வந்தே பாரத் ரயில்களின் சில சிறப்பம்சங்கள்:
- கவாச் பொருத்தப்பட்டது.
- தீ பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணக்கமான ரயில்.
- ஆற்றல் செயல்திறனுக்கான மீளுருவாக்க பிரேக்கிங் சிஸ்டம்.
- அதிக சராசரி வேகம்.
- அவசர காலங்களில் பயணிகள் – ரயில் மேலாளர் / லோகோ பைலட் இடையேயான தகவல்தொடர்புக்கான அவசர பேச்சு-பேக் யூனிட்.
- ஒவ்வொரு முனையிலும் ஓட்டுநர் பெட்டிகளில் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் (பிஆர்எம்) கொண்ட பயணிகளுக்கான தங்குமிடம், அணுகக்கூடிய கழிப்பறைகள்.
- அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்.
2024 டிசம்பர் 02 நிலவரப்படி, 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 16 வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன.
மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்