உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து கலைநயமிக்க வடிவில் 50 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட தேரில், பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களின் திருவுருவங்கள் அலங்கரிக்கின்றன. மேலும், 231 பொம்மைகள், 245 மணிகள் உள்ளிட்டவைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் புதிய தேரின் வெள்ளோட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதனை நாள்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் பார்வையிட்டு வரும் நிலையில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேரோட்டம் நாளை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
இந்த வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் சுப்பையன், திருத்தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு, குடிநீர், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.