2024 அக்டோபர் மாதத்தில் 17.80 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் தற்காலிக ஊதிய தரவு தெரிவிக்கிறது.
2024 அக்டோபர் மாதத்தில் 21,588 புதிய நிறுவனங்கள் தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தின் சமூகப் பாதுகாப்பு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகமான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் மாதத்தில் 17.28 லட்சம் தொழிலாளர்களும் 2024 அக்டோபர் மாதத்தில் 17.80 லட்சம் தொழிலாளர்களும் இத்திட்டத்தில் இணைந்தனர். இது 3 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.
2024 அக்டோபர் மாதத்தில் சேர்க்கப்பட்ட 17.80 லட்சம் தொழிலாளர்களில், 8.50 லட்சம் பேர், அதாவது மொத்த பதிவுகளில் சுமார் 47.75% பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
திவாஹர்