தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இலக்கிய உலா – கலை கல்வி இலக்கிய சேவை அமைப்பின் சார்பில், ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் ‘பவுர்ணமி நூல் வலம்’ என்கிற தலைப்பில் இலக்கியம் குறித்த விவாதம் நடைபெறுவது வழக்கம்.
அதனடிப்படையில் 03.05.2015 ஞாயிறு மாலை 7 மணி அளவில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு ‘வள்ளுவன் காட்டும் வாழ்வியல் வழிமுறைகள்’ எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லெட்சுமணப்பெருமாள், சிறப்பு விருந்தினராக கமலா மருத்துவமனையின் இயக்குநர் சம்பத்குமார், ரோட்டரி சங்கத்தின் துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இலக்கிய உலா அமைப்பாளர் ரவீந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 1330 திருக்குறளை ஒப்புவித்து பரிசு பெற்ற மாணவி ஷீலாவிற்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
-பி.இசக்கி @ கணேசன்.