மன்மோகன் சிங் நினைவிடம் தொடர்பான அவரது குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் கேட்ட இடத்தில் இறுதிச்சடங்கு நடத்த அனுமதிக்காதது ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை அவமதிக்கும். மன்மோகன் சிங்கின் பங்களிப்பை நினைவுகளில் இருந்து அழிக்கும் வகையில் பொருத்தமான இடத்தை ஒன்றிய அரசு தரவில்லை. பொருத்தமான இடத்தில் இறுதிச்சடங்கு செய்ய அனுமதி அளிக்காதது ஆணவம், ஒருதலைப்பட்சமான போக்கு என்று கூறியுள்ளார்.
கே.பி.சுகுமார்